தலைப்புச் செய்திகள்

இஸ்ரேலிய ராணுவத்தின் உதவியுடன், பலஸ்தீனர்கள் மீது குடியேறிகள் தாக்குதல்: வீடுகள், வியாபார நிலையத்துக்கும் தீ வைப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலுள்ள ஹுவாரா நகரில் 2022ஆம் ஆண்டு பாலஸ்தீனிய குடியிருப்பாளர்கள் மற்றும் கடைகள் மீது குடியேறிகள் தாக்குதல் நடத்திய ​​இஸ்ரேலிய குடியேறிகள், ஒரு தெருவில் தடி மற்றும் கோடரிகளுடன் நடந்து செல்கின்றனர்.

ஜெருசலமுக்கு வடக்கே ஆக்கிரமிக்கப்பட்ட இரண்டு மேற்குக் கரை கிராமங்களில் இஸ்ரேலிய குடியேறிகள் வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, குறைந்தது 12 பேருக்கு சிகிச்சை அளித்ததாக பாலஸ்தீனிய செம்பிறை அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு பலஸ்தீனியர்களின் வீடுகள், ஒரு பாலர் பாடசாலை மற்றும் ஒரு வியாபார நிலையம் ஆகியவை எரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இரவு நடந்த வன்முறையின் போது, இஸ்ரேலிய குடியேறிகளுக்கு இஸ்ரேலிய படையினர் ஆதரவு வழங்கியுள்ளது.

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 90 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மேற்குக் கரையில் ராணுவத் தாக்குதல்களில் பல பாஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக – பலஸ்தீனிய செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து – தெற்கு காஸாவிலுள்ள ரஃபாவில், இஸ்ரேலியப் படைகளால் மூன்று பலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குழந்தையும் அடங்குகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது நாளான நேற்றைய தினம் திங்கட்கிழமை 915 உதவி லொறிகள் காஸா பகுதிக்குள் நுழைந்ததாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.