தலைப்புச் செய்திகள்

தேசிய மக்கள் சக்தி எம்.பிகளின் சம்பளம் ஒரே கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொது சேவைக்காக பயன்படுத்தப்படுகிறது

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளங்களும் கொடுப்பனவுளும் ஒரே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு முதல் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினரான நிஹால் கலப்பதி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கட்சியால் இந்த நடைமுறை – ஒரு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுவதாகவும் அவர் இவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் நேற்று (20) பேசும் போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அந்த வகையில் ஜனாதிபதியும் இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறார் என்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டகல மேலும் கூறினார்.

“இந்த நிதி பொரல்லயில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொது சேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது,” என்றும்அவர் தெரிவித்தார்.