தலைப்புச் செய்திகள்

இஸ்ரேலின் ஸ்னைப்பர் தாக்குதலில் சிறுவன் உட்பட இருவர் தெற்கு காஸாவில் பலி

தெற்கு காஸாவின் ரஃபாவில் – இஸ்ரேலிய ராணுவத்தின் ஸ்னைப்பர் தாக்குதல்தாரிகளால் இரண்டு பலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ‘வஃபா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் இறந்தவர்களில் ஒருவர் பதின்ம வயதுடைவர் எனக் கூறப்படுகிறது.

போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், ரஃபா நகரின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் அவர்கள் கொல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும் இது குறித்து இஸ்ரேலிய ராணுவம் எந்த கருத்தையும் வெளியிடவில்லை

ரஃபாவில் இஸ்ரேலிய ஸ்னைப்பர் தாக்குதல் தாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால், இன்று வரை குழந்தைகள் உட்பட எட்டு பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, காஸாவில் கொங்றீட் இடிபாடுகளின் கீழ் புதையுண்டுள்ள சுமார் 10,000 உடல்களைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருவதாக சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னர் 62 இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதையும் பாருங்கள்