
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சொன்னபடி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசு ஒதுக்கிய வீட்டிலிருந்து எந்த நேரத்திலும் வெளியேறுவதற்குத் தயாராக இருப்பதாக – பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது தந்தை தற்போது வசித்து வரும் வீடு அவருடைய தனிப்பட்ட சொத்து அல்ல என்றும் அது அரசுக்குச் சொந்தமானது என்றும் தெரிவித்துள்ளதோடு, அரசியலமைப்பின் படி முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சலுகையாக அந்த வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே, வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்கிற முடிவு எடுக்கப்பட்டால், அந்த வீட்டை விட்டு வெளியேறுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ள நாமல் ராஜபக்ஷ, அதனை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மீளப்பெறப்படும் என, கட்டுக்குருந்தவில் பேசிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போது அரசு வழங்கியுள்ள வீட்டுக்கு, மாதாந்தம் லட்சம் ரூபாய் வாடகையாக செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, குறித்த வீட்டுக்கான வாடகையை அவர் செலுத்த வேண்டும், அல்லது அந்த வீட்டிலிருந்து அவர் வெளியேற வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
தொடர்பான செய்தி: மஹிந்தவின் வீட்டுக்கு அரசு 46 லட்சம் ரூபாய் மாத வாடகை செலுத்துகிறது: ஜனாதிபதி அனுர தெரிவிப்பு
இதையும் பாருங்கள்



