தலைப்புச் செய்திகள்

மின்சாரக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது: உங்கள் வீட்டுக்கு எவ்வளவு என தெரிந்து கொள்ளுங்கள்

மின்சாரக் கட்டணங்கள் இந்த ஆண்டின் முதல் 06 மாதங்களுக்கு 20% குறைக்கப்படும் என்று, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று (17) அறிவித்துள்ளது.

இதன் படி, இந்தக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

வீட்டுக் கட்டணம் – 20% குறைப்பு
வழிபாட்டுத் தலங்கள் – 21% குறைப்பு
ஹோட்டல்கள் – 31% குறைப்பு
தொழிற்சாலைகள் – 30% குறைப்பு
அரச நிறுவனங்கள் – 11% குறைப்பு

0-30 யூனிட்டுகள் 29% குறைப்பு
31-60 28%
61-90 19%
91-180 18%

அடுத்த 06 மாதங்களுக்கு கட்டணங்களைக் குறைக்கக் கூடாது என்று இலங்கை மின்சார சபை முன்மொழிந்த போதிலும் – மின்சாரக் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.