தலைப்புச் செய்திகள்

பெண் ஊழியர்களை பாலியல் துன்புறுத்தியமை: நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணி நீக்கம்

நாடாளுமன்ற பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு, பல கட்டங்களாக விசாரணைகளை நடத்திய பிறகு, மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவின் பரிந்துரையின் பேரில், சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன, மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய அனுமதியளித்துள்ளார்.

தொடர்பான செய்தி: பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில், நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் இடைநிறுத்தம்