
ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில், பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கொன்ஸ்டபிள் ஒருவரையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பிலியந்தலையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் தரிப்பிடத்தில் காரில் வந்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மொரட்டுவ விசேட அதிரடிப்படை முகாம் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
35 வயதான பொலிஸ் பரிசோதகர் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார், அதே நேரத்தில் கொன்ஸ்டபிள் ஹெரோயின் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.



