
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பந்துல லால் பண்டாரிகொட இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பந்துல லால் பண்டாரிகொட – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார – பதவி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்துக்காக பந்துல லால் பண்டாரிகொட நியமிக்கப்பட்டுள்ளார்.



