தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் திகாம்பரம், வேலுகுமார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்துச் சண்டை

– அஹமட் –

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். வேலுகுமார் மற்றும் பி. திகாரம்பரம் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில் ஒருவரையொருவர் தாக்கிச் சண்டையிட்டுள்ளனர்.

சக்தி ரிவி நடத்தும் ‘சமர்’ எனும் நிகழ்ச்சியில் – மேற்படி இருவரும் கலந்து கொண்ட போதே, இவ்வாறு சண்டையிட்டுள்ளனர்.

ஏற்கனவே ஒளிப்பதிவு செய்யற்பட்ட இந்த நிகழ்ச்சி – இன்று (20) இரவு 10.30க்கு ஒளிபரப்பப்படவுள்ளது.

குறித்த நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் – சக்தி ரிவியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருகிறது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சண்டையிடும் காட்சி காண்பிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலு குமார் மற்றும் திகாம்பரம் ஆகியோர் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடாக நாடாளுமன்றம் நுழைந்தார்கள்.

இந்த நிலையில், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி – இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் – சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. ஆனால், அதற்கு மாற்றமாக அந்த கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக அறிவித்தார்.

இதனையடுத்து வேலு குமார் குறித்து பேசிய மனோ கணேசன்; “அவர் ஒரு வரலாற்றுக் குப்பை” என சாடியிருந்தார்.

இந்தப் பின்னணயிலதான் மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வேலு குமாரும், திகாம்பரமும் கலந்து கொண்டனர்.

குறித்த தொலைக்காட்சி நிகழ்சி முன்னோட்டத்தில் காண்பிக்கப்பட்டதன்படி, வேலு குமார் மீது திகாபரம்தான் முதலில் தாக்குதல் நடத்துகின்றார்.

வேலு குமாரை முதலில் “பார் (சாராயக் கடை) குமார்” என்று திகாம்பரம் திட்டுகிறார். அதனையடுத்து “குடு திகா” என்று வேலு குமார் திட்டுகிறார். இதன் காரணமாகவே, வேலு குமாரை – திகாம்பரம் தாக்குகிறார்.