தலைப்புச் செய்திகள்

அரகலய போராட்ட சூத்திரதாரிகளில் ரணிலும் ஒருவர்: நாமல் குற்றச்சாட்டு

அரகலய போராட்டத்தின் சூத்திரதாரிகளில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என நிரூபணமாகிறது என்று – பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

அரகலய போராட்டத்தை கட்டமைத்தவர்களில் ஜனாதிபதி ரணிலும் ஒருவர் என்றும் அவர் கூறியுள்ளார். 

‘சிஸ்டம் ச்சேஞ்ச்’ என்ற முறைமை மாற்றத்தைக் கோரி போராடிய இளைஞர்கள் இன்னும் வீதிகளிலேயே இருக்கிறார்கள்.

அரகலயவில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள். 

அவருடைய செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அவரும் அரகலய போராட்டத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் என நிரூபணமாகிறது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.