தலைப்புச் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி வேலுகுமார், ரணிலுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், ஜனாதிபதி தேர்தலில் – ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் இன்று (15) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியின் அலுவலகத்தில் சந்தித்ததாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கையளிப்பதற்காகப் புறப்படுவதற்கு முன்னர் – நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஜனாதிபதியை சிறிது நேரம் சந்தித்திருந்தார் என, மனுஷ நாணயகார கூறியுள்ளார்.

2015 பொதுத் தேர்தலில் வேலு குமார் – முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மூலம் நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.