
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
அண்மையில் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்றுடன் கலந்துரையாடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா; “ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை” எனக் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது சில செயற்பாட்டாளர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருந்தனர்.
இதற்குப் பதிலளித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தான் ஒரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் – தங்களுக்குத் விருப்பமான எவருக்கும் ஆதரவளிக்க சுதந்திரம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.



