
அமைச்சர் அலி சப்ரி – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் – அமைச்சர் அலி சப்ரி இன்று (12) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அமைச்சர் சப்ரி தற்போது வகிக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக மேற்படி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சராகப் பதவி வகிதத விஜயதாச ராஜபக்ஷ ராஜினாமா செய்தமையினையினை அடுத்து – வெற்றிடமான அமைச்சுப் பதவிகளை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் காரணத்தினால் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுப் பதவிகளில் இருந்து விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் ராஜினாமா செய்தார்.



