
முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 03 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.
டிபென்டர் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் – குற்றவாளி என நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றங்களின் பாரதூரத்தை கருத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
2015 டிசம்பர் 21ஆம் திகதி, தெமட்டகொடை பிரதேசத்தில் வைத்து அமில பிரியந்த அமரசிங்க எனும் நபரை ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மெய்ப்பாதுகாவலர்கள், அவருக்கு சொந்தமான டிபென்டர் வாகனத்தில் வைத்து கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.



