
உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை ஏற்று – நாடாளுமன்றத்தில் இன்று (6) சமர்ப்பிக்கப்பட்ட புதிய மின்சார சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது.
குறித்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.
ஆளும் கட்சி சமர்ப்பித்துள்ள குறித்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.
தொடர்பான செய்தி: இலங்கை மின்சார சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு



