
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (03) திங்கட்கிழமை மூடப்படும் என கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான மழை மற்றும் வெள்ளம் – பல்வேறு பிராந்தியங்களை பாதித்துள்ளமையினால், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பாடசாலைகளை மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நேற்றும் இன்றும் நாட்டில் பலர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



