மோட்டார் பைக்கில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

🕔 March 18, 2023

மோட்டார் பைக்கில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 40 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (18) மாலை கொட்டாஞ்சேனை – பரமானந்த மாவத்தையில் இச் சம்பவம் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்ட நபர் முச்சக்கர வண்டி திருத்துமிடம் ஒன்றில் இருந்த போது, துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்