முன்னாள் எம்.பி ரங்காவை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 March 18, 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை நாளை மறுதிம் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட ஸ்ரீ ரங்கா, இன்று (18) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வாகன விபத்து தொடர்பான வழக்கில் சாட்சியை அச்சுறுத்தியமை, வழக்கில் ஆஜராகாமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ரங்கா கைது செய்யப்பட்டார்.

தொடர்பான செய்தி: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்