“அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது”

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி, இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை என அரச அச்சகர் கங்காணி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது வரை அச்சிடப்பட்டுள்ள தபால்மூல வாக்குச்சீட்டுகளை வழங்க முடியாதுள்ளது என அவர் கூறியுள்ளதாக – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு பாதுகாப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
எனினும், அவற்றைக் கட்டுகளாக தயார் செய்து பொலிஸ் பாதுகாப்பில் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
340 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், உள்ளுராட்சி மன்றங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.