தலைப்புச் செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு: விலை குறைத்து அறிவிப்பு

எரிவாயுக்கான விலையை லாஃப்ஸ் நிறுவனமும் இன்று (06) தொடக்கம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 220 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க புதிய விலை 5080 ரூபா.

05 கிலோகிராம் எரிவாயுவின் விலை 88 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 2032 ரூபாவாகும்.

நேற்றைய தினம் லிற்ரோ எரிவாயுவின் விலைகளும் குறைக்கப்பட்டிருந்தன.

12.5 கிலோகிராம் லிற்ரோ எரிவாயுவின் விலை 4409 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.