ஒரே மாவட்டத்தில் 01 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் அதிகரிப்பு

🕔 January 6, 2023

ம்பஹா மாவட்டத்தில் 1,833,602 பேர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் 19 உள்ளூராட்சி சபைகளுக்கு 688 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின்படி கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 1,833,602 பேர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 109,293 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்