தலைப்புச் செய்திகள்

தேர்தல் நடத்தப்பட்டால், உலக சாதனையாக அமையும்: நிதி ராஜாங்க அமைச்சர்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையலாம் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பணம் அச்சிடப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எனவே அவ்வாறான தேர்தலை நடத்துவது உலக சாதனையாக அமையும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு 800 கோடி ரூபா வரையில் தேவைப்படும் என, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை நினைவுகொள்ளத்தக்கது.