புற்றுநோய், நீரிழிவு நோய்களை பாரம்பரிய உள்ளூர் அரிசிகள் கட்டுப்படுத்துகின்றன: ஆய்வில் முடிவு

🕔 January 6, 2023
பட்டபொலல – இலங்கையின் பாரம்பரிய நெல் மற்றும் அரிசி

விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட மருத்துவப் பெறுமதியுள்ள பாரம்பரிய உள்ளூர் அரிசி வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் – புற்று நோய், நீரிழிவு மற்றும் பல நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CISIR) பணிப்பாளர் நாயகம் டொக்டர் சிறிமல் பிரேமகுமார தெரிவித்துள்ளார்.

25 வகையான உள்ளூர் அரிசியைப் பயன்படுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.

சுது ஹீனாட்டி, கொட ஹீனாட்டி, திக் வீ மற்றும் மசூரன் அரிசி வகைகளின் மருத்துவப் பயன்கள் குறித்த அறிவியல் ஆய்வுக் கட்டுரையும் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளன.

பாரம்பரிய அறிவை விஞ்ஞான ரீதியில் நிரூபித்த இந்த ஆய்வு முடிவுகளை, இலங்கை சரியாக பயன்படுத்திக் கொள்வதாக தெரியவில்லை என டொக்டர் பிரேமகுமார பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்