முப்பத்தாறு வருடங்களுக்குப் பின்னர் கால்பந்து உலகக் கோப்பையை தூக்கிய ஆர்ஜென்டினா: அதிரடியாக அமைந்த இறுதிப்போட்டி

🕔 December 19, 2022
உலகக் கோப்பையை முத்தமிடும் மெஸ்ஸி

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை ஆர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் பிரான்ஸை 4 – 2 என்ற கணக்கில் ஆர்ஜென்டினா வென்றது.

ஆர்ஜென்டினாவின் எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, ஆர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள்.

ஆர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. ஆர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது.

இரண்டாம் பாதியில் பிரான்ஸின் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் ஆர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக இந்த இறுதிப்போட்டி மாறியதற்கு முக்கிய காரணம் அவர்தான்.

2018இல் பிரான்ஸ் அணிக்காக, 19 வயதில் எம்பாப்பே உலகக்கோப்பையை வென்று, உலகளாவிய பார்வையைப் பெற்றார்.

முதல் பாதியில் அர்ஜென்டினாவில் ஆதிக்கம் 

ஆர்ஜென்டினா அணியினர் முதல் பாதியில், பிரான்ஸ் அணியைச் சிந்திக்க விடாமல் ஆடினார்கள். டி மரியா, டிபால், மெக் ஆலிஸ்டர், ரொமேரோ என்று அனைவரும் அதிரடி ஆட்டத்தைக் காட்டினார்கள்.

ஆர்ஜென்டினா இதற்கு முன்பு 1930ஆம் ஆண்டில் இதேபோல் இரண்டு கோல் முன்னிலையில் உருகுவேகவுக்கு எதிராக இருந்தது. ஆனால், இறுதியில் உருகுவே 4-2 என்ற கணக்கில் வென்றது.

எம்பாப்பே பெனால்டி ஷாட்டை கோலாக்கி, பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்தார். ஒட்டமெண்டியின் தவறால், பிரான்ஸுக்கு ஒரு கம்பேக் கிடைத்தது. எம்பாப்பேவின் ஆறாவது உலகக்கோப்பை கோல் இது.

ஒரேயொரு தனிமனித தவறால் ஆர்ஜென்டினாவுக்கு மீண்டும் ஓர் அபாய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் பிரான்ஸுக்காக கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.

எம்பாப்பே ஏழாவது கோலுடன், ‘கோல்டன் பூட்’ பெறுவதற்கான போட்டியில் முன்னிலைக்கு வந்துள்ளார்.

ஓர் அணி முதல் பாதியில் இருந்த அதே ஆக்ரோஷத்துடன் ஆடுவது சிரமம் தான். ஆனால், அர்ஜென்டினா இந்த முறை அதைச் செய்தது.

ஆர்ஜென்டினா அணித்தலைவர் மெஸ்ஸி ‘கோல்டன் போல்’ விருதையும் மற்றும் அதே அணியைச் சேர்ந்த கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் ‘கோல்டன் குளோவ்´’ விருதையும் வென்றனர்.

மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே

Comments

புதிது பேஸ்புக் பக்கம்