தலைப்புச் செய்திகள்

அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி தொடக்கம் மதிய உணவு: கல்வியமைச்சர் தெரிவிப்பு

நாட்டின் முழுப் பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனையில் உள்ள பிரின்ஸ் பாடசாலையில் நேற்று (15) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

பாடசாலை மாணவர்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்பதை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒப்புக்கொண்ட நிலையில், மதிய உணவுத் திட்டத்துக்கு அரசு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.

அந்த வகையில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவை வழங்க அரசு 4 பில்லியன் ரூபாவை ஒதுக்கியது. மேலும் மாணவர்களுக்கான காலணிகள் உட்பட பாடசாலை தேவைகளை வழங்குவதற்காகவும் 4 பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கிறது.

பாடசாலைகளுக்கு மதிய உணவு வழங்கும் முன்னோடி வேலைத்திட்டம் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 18 பாடசாலைகளில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.