தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமனம்

🕔 November 15, 2022

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் அச்சி முகம்மது இஸ்ஹாக் – முன்னர் பதவி வகித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்