
சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை சவாலுக்குட்படுத்தி சமூக ஆர்வலர் ஒஷால ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (15) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி, இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் என்றும், அதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்திருக்க முடியாது எனவும் உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 21ஆவது திருத்தத்தின் பிரகாரம், இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



