பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார்

🕔 November 1, 2022

கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற அமைதியின்மையின் போது – தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அதன்பின்னர் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து நேற்று (31) இரவு அங்கு கடுமையான பதற்றம் நிலவியது.

போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ​​பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தில் காயமடைந்த அவர் – சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்