தம்புள்ளை பள்ளிவாசலைப் படமெடுத்த பிக்குகள்; பொலிஸார் வரும் முன்பு அகன்றனர்

🕔 January 11, 2016

Dambulla mosque - 02ம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்கு ‘சிங்­ஹ லே’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப் பட்­டி­ருந்த ஜீப் வண்டியில் சென்ற இரு பௌத்த பிக்குகளும், இரு இளை­ஞர்­களும் பள்­ளி­வா­சலை புகைப்­படம் எடுத்துக் கொண்­ட­துடன் அயல் வீட்­டார்­க­ளிடம் பள்­ளி­வாசல் அப்­பு­றப்­ப­டுத்­தா­மைக்கான காரணத்தை வின­வி­யுள்­ளனர்.

ஜீப் வண்­டியின் முன்னால் ஒட்­டப்­பட்­டி­ருந்த ‘சிங்ஹலே’ ஸ்டிக்கர் பள்­ளி­வா­சலில் பொருத்தப்பட்­டி­ருந்த சீ.சீ.ரி.வி. கம­ராவில் பதி­வு­றாத வகையில் ஜீப் வண்டி பின் நோக்­கியே செலுத்­தப்­பட்­டுள்­ளது. இச் சம்­பவம் நேற்று  ஞாயிற்றுக் கிழமை காலை நிகழ்ந்­துள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் தம்­புள்ளை பொலிஸ் நிலை­யத்­துக்கு உட­ன­டி­யாக அறி­வித்­த­தை­ய­டுத்து, பொலிஸார் தம்­புள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி சம­ரகோன் தலை­மையில் உடன் சென்­றி­ருந்தனர். ஆயினும், பொலிஸார் ஸ்தலத்­துக்கு விஜயம் செய்வதற்கு முன்பாக, குறிப்­பிட்ட ஜீப் வண்டி அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகன்று விட்­ட­தாக தெரிவிக்கப்படு­கி­றது.

ஜீப்­வண்­டியில் வருகை தந்த பௌத்த பிக்குகள், இளை­ஞர்­களும் பக்­கத்தில் குடியிருப்பவர்களிடம் ஏன் இந்தப் பள்­ளி­வாசல் இவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றப்­ப­டா­ம­லிக்­கி­றது என்று வின­வி­யி­ருக்­கி­றார்கள். பள்­ளி­வாசல் அகற்­றப்­பட வேண்­டு­மெ­னவும் தெரிவித்திருக்கின்றார்கள். இது பற்றி தம்­புள்ளை பொலிஸில் நாம் முறைப்­பாடு செய்திருக்கிறோம் என பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் தெரிவித்தார்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் தம்­புள்ளை கடும்­போக்கு குழு­வி­னரால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திக­தி­யன்று தாக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் ரங்­கிரி – ரஜ­ம­கா­வி­கா­ரைக்குச் சொந்­த­மான புனித பூமியில் சட்ட­வி­ரோ­த­மாக அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வி­டத்­தி­லி­ருந்து பள்­ளி­வாசல் அகற்­றப்­பட வேண்­டு­மெ­னவும் தொடர்ச்­சி­யாகக் கோரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தம்­புள்­ளையில் பள்­ளி­வா­சலைச் சூழ­வுள்ள பல வர்த்­தக நிலை­யங்கள் வீடுகள் ஏற்­க­னவே அப்புறப்படுத்­தப்­பட்­டுள்­ள­துடன் சில வீடுகள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டா­துள்­ளன.

அத்­துடன், பள்­ளி­வாசல் நிர்­வாகம் பொல்­வத்தை பகு­தியில் காணி வழங்­கப்­பட்டால் அவ்விடத்திலி­ருந்து பள்­ளி­வா­சலை அகற்றிக் கொள்ள விருப்பம் தெரி­வித்­துள்­ள­மையும் குறிப்பிடத்­தக்­கது.

தம்­புள்ளை பொலிஸார் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி: விடிவெள்ளி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்