சிராஸ் மீராசாஹிப், நிபுணத்துவ ஆலோசகராக நியமனம்

🕔 January 11, 2016

Ziras - 013– அகமட் எஸ். முகைடீன் –

ல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று திங்கட்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார்.

மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு, அமைச்சு அலுவலகத்தில்  இன்று நடைபெற்றது.

இதேவேளை, மேற்படி பதவியினைப் பெற்றுக் கொண்ட சிராஸ் மீராசாஹிப், அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருக்கான அலுவலகத்தில் தனது கடமைகளை இன்றைய தினமே பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த பதவியானது, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் சகல செயற்பாடுகளிலும் அமைச்சருடன் இணைந்து செயற்படவேண்டிய அமைச்சின் மிகப் பொறுப்பு வாய்ந்தாகும்.Ziras - 012

Comments

புதிது பேஸ்புக் பக்கம்