மஹிந்த குடும்பத்தவர் நால்வர், 42650 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்; சதுர சேனாரத்ன குற்றச்சாட்டு

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை மோசடியாகச் சம்பாதித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
காலி பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்படி விடயத்தினை அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
“கடந்த ஆட்சியில் முக்கிய பிரமுகர்கள் நான்கு பேர் இணைந்து 42650 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இவர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் காரணமாக மேலதிக விபரங்களை வெளியிட முடியாதுள்ளது.
எனினும் கடந்த ஆட்சியின் குறித்த முக்கிய பிரமுகர்கள் நான்கு பேரும் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்னவின் புதல்வரான சதுர சேனாரத்ன, நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவருவதில் சிறப்பான பங்களிப்பினைச் செய்தவராவார்.