‘உலகின் அழுக்கு மனிதர்’ காலமானார்

🕔 October 25, 2022

ல தசாப்தங்களாக குளிக்காமல் இருந்ததற்காக ‘உலகின் அழுக்கு மனிதர்’ என்று செல்லப்பெயர் பெற்ற ஈரானிய நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 94 வயதில் மரணித்தார்.

60 வருடங்களக்கும் மேலாக – குளிக்காமல் தனிமையில் இருந்த அமு ஹாஜி, ஈரானின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் அவர் இறந்தார்.

‘நோய் வந்து விடும்’ என்ற அச்சத்தில் `ஹாஜி குளிப்பதைத் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு – முதல் முறையாக, கிராமவாசிகள் அவரைக் குளிக்க வைத்துள்ளனர்.

குடிசையொன்றில் வாழ்ந்து வந்த அவர், ஒரே நேரத்தில் பல சிகரட்டுக்களை ஒன்றாகப் புகைக்கும் படங்கள் ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

2013 இல் அவரது வாழ்க்கையைப் பற்றி ‘அமு ஹாஜியின் விசித்திரமான வாழ்க்கை’ (The Strange Life of Amou Haji) எனும் தலைப்பில் ஒரு சிறு ஆவணப்படம் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்