தேசிய மட்ட கராத்தே போட்டியில், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு தங்கம் உட்பட 5 பதக்கங்கள்

🕔 October 25, 2022

– யூ.கே. காலித்தீன், எஸ். ஏ. அஷ்ரப்கான் –

பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட  ‘தைக்கொண்டோ’ கராத்தே சுற்று போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என, மொத்தமாக 5 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இம் மாதம் 21,22 மற்றும் 23 ஆகிய தினங்களில் கேகாலை மகா வித்தியாலயத்தில் தேசிய மட்டப் போட்டிகள் இடம்பெற்றன.

இதில் 20 வயதுக்குற்பட்ட மாணவர்களுக்கான 80-87Kg எடைப் பிரிவில் ஜே.ஏ. சுமைட்  தங்க பதக்கமும்,  74-80 kg எடைப் பிரிவில் என்.எம். நுஸ்ரி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

63-68 kg எடைப் பிரிவில் ஏ.எல்.எம். அப்ரி வெண்கலப் பதக்கத்தையும், +87 kg எடைப் பிரிவில் ஏ.எம். நாஸிக் அன்சாப்  வெண்கல பதக்கத்தையும், 18 வயதுக்குற்பட்ட மாணவர்களுக்கான +74kg எடைப் பிரிவில் ஜே.ஏ. சுரைப் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர்.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை – இப்போட்டியில் கலந்து கொண்டமை இதுவே  முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்