கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட, முஜிபுர் ரஹ்மான் எம்.பி ராஜிநாமா செய்கிறாரா?

🕔 October 25, 2022

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மேயர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என செய்திகள் பரவியுள்ள நிலையில்; அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (25) தெரிவித்துள்ளார்.

“சமீபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய தொகுதி கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தான் இந்த தகவலை வெளியிட்டார். ஆனால் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று முஜிபுர் ரஹ்மான் ஆங்கில ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

“உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கி மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்தால், அந்த வெற்றிடத்தை ஏ.எச்.எம். பௌசி நிரப்புவார்” என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்