சஊதியின் பிரதமராக பட்டத்து இளவரசர் சல்மான் நியமனம்

🕔 September 28, 2022

ஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரம்பரியமாக சஊதி பிரதமர் பதவி என்பது அரசர் பதவியில் இருப்பவர் தன்வசம் வைத்திருக்கும் பதவியாகும். ஆனால், அப்பதவிக்கு இளவரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.

86 வயதான அரசர் சல்மான் பின் அப்துல் அசிஸ்-இன் 37 வயது மகனான முகமது பின் சல்மான் – சஊதியின் நடைமுறை ஆட்சியாளராக ஏற்கெனவே பார்க்கப்படுகிறார்.

அதாவது மன்னராக இவரது தந்தை இருந்தாலும் நிர்வாக முடிவுகளை இவரே எடுப்பதாகப் பார்க்கப்படுகிறது.

முகமது பின் சல்மான் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்புகளில் இருந்து – பதவி உயர்வு பெறுவதை அறிவிக்கும் அரச ஆணை அடிப்படை சட்டத்தில் விதிவிலக்கை சுட்டிக்காட்டுகிறது.

முகமது பின் சல்மானுக்கு அரசர் வழங்கிய முன்தைய பிரதிநிதித்துவத்துக்கு உகந்ததாக இந்த நடவடிக்கை அமைகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“பட்டத்து இளவரசர் நாட்டின் முக்கிய நிர்வாக அமைப்புகளை ஏற்கெனவே தினமும் கண்காணித்து வருகிறார். அந்த நிலையில் அவரது புதிய பொறுப்பாக பிரதமர் பதவி வருகிறது” என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசர், அவர் கலந்து கொள்கின்ற அமைச்சரவை கூட்டங்களை தலைமை தாங்கி நடத்துவதை தொடர்வார்.

2015ஆம் ஆண்டு தந்தை அரசராக வருவதற்கு முன்பு, முகமது பின் சல்மானை பற்றி சௌதி அரேபியாவுக்கு வெளியே யாருக்கும் தெரியாது.

பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கியது மற்றும் பொருளாதாரம் எண்ணெய் வளத்தை சார்ந்து இருப்பதை நீக்க முற்படுவது என சல்மான் கொண்டுவந்த சில சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கக்காக அவர் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்