வீட்டுத் தொலைபேசிக் கட்டணத்தை அரச பணத்தில் செலுத்திய வழக்கு: அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட இருவருக்கு பிணை

🕔 September 28, 2022

மைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (28) குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.

மேற்படி இருவருக்கும் எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்தது.

மேற்படி இருவரும் தங்கள் தனிப்பட்ட வீட்டின் தொலைபேசிக் கட்டணத்தை அரச பணத்தில் செலுத்தியதாகவும், அதன் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாடடி இந்தக் குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவரையும் பிணையில் விடுவிக்க நீதிம்றம் உத்தரவிட்டதுடன், வழக்கை நொவம்பர் 03ஆம் திகதிக்குக ஒத்தி வைத்தது.

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்தி, தனிப்பட்ட மாதாந்த தொலைபேசி கட்டணத்தை செலுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல 2012 ஆம் ஆண்டு மார்ச் 15 முதல் ஏப்ரல் 14 வரையான காலப்பகுதியில் வெகுஜன ஊடக அமைச்சராக இருந்த காலப்பகுதியில், தனது வீட்டின் தொலைபேசி பட்டியல் கட்டணமாக, 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்