கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.தே.கட்சி உறுப்பினர் நாணயச் சுழற்சி மூலம் தெரிவு

🕔 September 28, 2022

ண்டி – கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சிசிர ரணசிங்க நாணயச் சுழற்சி மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களான சமிந்த கருணாரத்ன, ரவிப்பிரிய சமிகர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிசிர ரணசிங்க ஆகியோர் இந்தப் பதவிக்கு போட்டியிட்டனர்.

ஆரம்ப சுற்று வாக்குகளின் போது சமிந்த கருணாரத்ன 10 வாக்குகளையும் ரணசிங்க 08 வாக்குகளையும் சமிக்கர 02 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதனையடுத்து போட்டியிலிருந்து சமிகர நீக்கப்பட்டதன் பின்னர், கருணாரத்ன மற்றும் ரணசிங்க இருவரும் இரண்டாவது சுற்று வாக்களிப்பில் தலா 10 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

அதனையடுத்து மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனகா ஹேரத், நாணயச் சுழற்சி மூலம் இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார்.

இதன் மூலம், ஐக்கிய தேசியக் கட்சியின் சிசிர ரணசிங்க, கண்டி – கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரவிப்பிரிய சமிகர, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதனையடுத்து பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்