அலி சப்ரி ரஹீமுடைய கார் மோதி நபர் பலி: விபத்து நடந்த போது வாகனத்தினுள் எம்.பி இருந்ததாக பொலிஸார் தெரிவிப்பு

🕔 May 5, 2022

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுடைய கார் மோதியதில்ட பாதசாரி ஒருவர் மரணமடைந்தார்.

பாலாவி – கல்பிட்டி வீதியில் மாம்புரி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.

விபத்துக்குள்ளான நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இருந்ததாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் மாந்தீவைச் சேர்ந்த சிமியன் பெனடிக்ட் டிக்சன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் சாலையைக் கடக்கும்போது, நாடாளுமன்ற உறுப்பினரின் கார் – அவர் மீது மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தின் போது கார் அதீத வேகத்தில் செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனம் ஓட்டியதால், பாதசாரி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக சாரதி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நுரைச்சோலை பொலிஸ் எல்லைக்குள் இடம்பெற்றுள்ள போதிலும், நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு, விசாரணைகளை புத்தளம் பொலிஸாரிடம் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு ஒப்படைத்துள்ளது.

Comments