தலைப்புச் செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை, நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கிறது

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை இன்று (22) நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அதன் விலை 5,175 ரூபாவாக உயரவுள்ளது.

தற்போது 2800 ரூபாவுக்கு 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்கப்படுகின்றது.

ஏற்கனவே லாஃப்ஸ் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை  4,199 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. ஆயினும் சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு மிக நீண்ட நாட்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.