தலைப்புச் செய்திகள்

கட்டாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுவிப்பு: நோன்பு பெருநாளையொட்டிய நடவடிக்கை

ட்டார் நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கட்டார் அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டுள்ள 20 இலங்கையர்களும், கட்டாரில் கடமையாற்றும் போது, பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றவர்களாவர்.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, நீதிமன்றங்களால் செலுத்துமாறு உத்தரவிடப்பட்ட பண அபராதங்களிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ரமழான் நோன்புப் பெருநாளைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கையை மேற்கொண்டமைக்காக கட்டார் அரசை, இலங்கை வேளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பாராட்டியுள்ளது.