தலைப்புச் செய்திகள்

பால் மா விலை மேலும் உயர்வடையும்: இறக்குமதியாளர் சங்கம் தெரிவிப்பு

பால் மாவின் விலை அடுத்த வாரத்தில் மேலும் அதிகரிக்கப்படுவதற்கான சந்தர்பம் உள்ளதாக, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதைய பால் மாவின் கையிருப்பு நிறைவடைந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்படும் பால் மா – அடுத்த வாரம் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பால் மா கையிருப்பு கிடைத்ததும் அதற்கான விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்படும் பால் மா 400 கிராம் பெட்டியின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதோடு, 01 கிலோ பால் மாவின் விலை 600 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டது.

இதற்கமைய 400 கிராம் பால் மா பெட்டி ரூ. 790 ஆகவும், 01 கிலோ பால் மா 1,945 ரூபாவுக்கும் தற்போது விற்கப்படுகின்றது.