ரம்புக்கண சம்பவத்தில் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன: விசாரணையில் தெரிவிப்பு

🕔 April 22, 2022

ம்புக்கண துப்பாக்கிச் சூட்டின் போது ரி-56 ரக துப்பாக்கிகள் நான்கு பயன்படுத்தப்பட்டதோடு, 35 தோட்டாக்களும் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.

ரம்புக்கண சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட பொலிஸ் குழு இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகினார்.

ரம்புக்கணயில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையானார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு, சம்பவ இடத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்குப் பரிந்துரைகளை வழங்கவுள்ளது.

ரம்புக்கணயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நாரண்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷான் என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்