தலைப்புச் செய்திகள்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தீர்மானம், அரசாங்கத்தினால் நிராகரிப்பு

லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு அந்த நிறுவனம் எடுத்த தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஹிரு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், எனவே இன்று இரவு எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு தொடக்கம் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என்றும், அந்த வகையில் 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றில் விலை 5175 ரூபாவாக உயர்வடையும் எனவும் லிட்ரோ நிறுவம் தெரிவித்திருந்தது.

தொடர்பான செய்தி: லிட்ரோ எரிவாயு விலை, நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கிறது