
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இலங்கைக்கு உதவ சஊதி அரேபியா தயாராக இருப்பதாக, சஊதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (14) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் பல துறைகளிலும் நேரடி முதலீடுகளை மேற்கொள்ள சஊதி அரேபியாவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, தொழில்நுட்பம் சார்ந்த அபிவிருத்தி ஆகிய துறைகளிலும், கொழும்பு துறைமுக நகரத்திலும் வெளிநாட்டு முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்புகள்உள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.



