மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு

🕔 March 6, 2022

யிருடன் இல்லாத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர், தமது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் குடியிருப்புகளுக்கான நீர்க் கட்டண மாக 10 மில்லியன் ரூபாவை – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டியிருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் உயிருடன் இருக்கும் போது இந்தக் கட்டணங்களை நீர்ப்பாவனைக்காக செலுத்த வேண்டியிருந்ததாகவும், எனினும், அந்தப் பணத்தை அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருப்பதாகவும் நீர் வழங்கல் அதிகார சபை வட்டாரங்கள் தெரிவிப்பதோடு, அந்தக் கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிருடன் இருந்த போது மேற்படி கட்டணங்களை செலுத்துமாறு பல நினைவூட்டல்கள் அனுப்பப்பட்ட போதும், அவர்கள் கட்டணத்தை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, 01 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை மின்சாரக் கட்டணத்தை செலுத்தவில்லை என அண்மையில் அறிவிக்கப்பட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நீர்க் கட்டண நிலுவையினையும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எனவே நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை செலுத்தாத அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் இருந்து, உடனடியாக நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களிடம் சில தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்