புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

🕔 March 5, 2022

மிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டுப் போரின் போது சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபரான தங்கவேலு நிமலன், உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் உறுப்பினராகப் பணியாற்றியவர்.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 02 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருலுள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

ரத்மலான பகுதியில் 2007ஆம் ஆண்டு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சித்தமை, 2009ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை தேர்தல் மேடைக்கு அருகில் குண்டு வெடிக்கச் செய்து – கொலை செய்ய முயற்சித்தமை என்பன, மேற்படி நபர் மீதான ஏனைய குற்றச்சாட்டுகளாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்