இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல்

🕔 March 3, 2022

லங்கையிலுள்ள யுக்ரேன் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளமைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டமொன்றுக்கு, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ‘ஹிரு’ தொலைக்காட்சி செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாப் பிரயாணிகளாக வருகை தந்துள்ள யுக்ரேனியர்களில் சிலர் – ரஷ்யாவுக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியபோது, அங்கிருந்த ரஷ்யப் பெண்கள் இருவர், யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக ‘ஹிரு’ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் உள்ள ரஷ்ய மற்றும் யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என, ஆங்கில ஊடகமொன்று கூறுகிறது.

இலங்கையிலுள்ள ரஷ்ய மற்றும் யுக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் வீசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை, எந்தவித மேலதிக கட்டணங்களுமின்றி நீடிப்பதற்கு, இந்த வார ஆரம்பத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்