சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

🕔 February 24, 2022

டமையின் போது சப்பாத்து அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடை அணிந்து கொண்டு சப்பாத்துக்களுக்குப் பதிலாக செருப்புகளை அணிந்தவாறு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டபோது, அவரை நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக – பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பின்னர் பகிரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையையும் பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

வீடியோ

Comments