மரணித்த பிச்சைக்காரரின் காற்சட்டைப் பைகளிலிருந்து 04 லட்சம் ரூபாய் மீட்பு

🕔 February 11, 2022

பிச்கைக்காரர் ஒருவர் இறந்த நிலையில், அவரின் கால்சட்டைப் பையில் இருந்து 04 லட்சம் ரூபா பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹக்மன பிரதேசத்தில் வசித்து வந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவரே நேற்று (10) உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது கால்சட்டை பைகளில் கிட்டத்தட்ட 400,000 ரூபாய் கண்டெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 69 வயதான ஹக்மான கொங்கல.தி. விமலதாச என்ற பிச்சைக்காரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தான் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் உள்ள மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தனியாக வசித்து வந்த இவர், இதற்கு முன்பு இசைக்கருவி வாசிப்பவராக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவருக்கு உறவினர்கள் யாரும் இருப்பதாக தகவல் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments