பஸ் கட்டணங்கள் அதிகரிக்கின்றன: போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு

🕔 December 29, 2021

லங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களுக்கான போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க 03 ரூபா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் தற்போது 14 ரூபாவாகவுள்ள ஆரம்பக் கட்டணம், 17 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 05ஆம் திகதி தொடக்கம் இந்த போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்